×

சீரகத் துவையல்

தேவையானவை:

சீரகம் – 1½ டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் – 6,
உளுந்து – 2 டீஸ்பூன்,
வெந்தயம் – ¼ டீஸ்பூன்,
கடுகு – ¼ டீஸ்பூன்,
வெங்காயம் – 1 அரிந்தது,
புளி – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், மிளகாய், உளுந்து வறுத்து கடைசியில் வெங்காயம் சேர்த்து வதக்கி இறக்கி, ஆறியபின் உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

The post சீரகத் துவையல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கேரட் ஓட்ஸ் இட்லி