கீழ்குந்தா காடெ ஹெத்தையம்மன் கோயில் அறங்காவலர்கள் நியமனம்

 

மஞ்சூர், டிச.9: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கீழ்குந்தாவில் படுகரின மக்களின் குலதெய்வமான காடெ ஹெத்தையம்மன் கோயில் உள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோயில் குந்தை சீமை கீழ்குந்தா 14 ஊர்களுக்கு சொந்தமானதாக உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீபக், ராஜேந்திரன், தேவராஜன், கென்னடி கிருஷ்ணன் ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டார்கள். தொடர்ந்து நேற்று அறநிலையத்துறை ஆய்வாளர் ஹேமலதா முன்னிலையில் அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜேந்திரன் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டார்கள். இவர்களுக்கு கீழ்குந்தா ஊர் பொதுமக்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

The post கீழ்குந்தா காடெ ஹெத்தையம்மன் கோயில் அறங்காவலர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: