வெள்ளக்கோவில், டிச.8: முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும். அதன் படி நடந்த கொப்பரை ஏலத்தில் 770 கிலோ கொப்பரை வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.128.20க்கும், குறைந்த பட்சமாக ரூ.85.25க்கும் ஏலம் போனது. மொத்தம் 770 கிலோ கொப்பரை, ரூ.86 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.35 விவசாயிகள் பங்கேற்றனர் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்திற்கு சுற்று வட்டார விவசாயிகள் 38 பேர், நேற்று விற்பனை கூடத்திற்கு 5019 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ ரூ.47.85க்கும்,2ம் தரம் ஒரு கிலோ ரூ.29.95க்கும்,சராசரி ரூ.42.65க்கும் ஏலம் போனது 1.7 டன் தேங்காய்கள் மொத்தம் ரூ.68 ஆயிரத்துக்கு ஏலம் போனது என, விற்பனைகூட மேற்பார்வையாளர் சங்கீதா தெரிவித்தார்.
The post முத்தூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.86 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.