திருச்சி, டிச.8: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினம் (5ம் தேதி) கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினரான 3 டிஎன் ஏர் எஸ்க்யூஎன் டெக் என்சிசி விங் கமாண்டர் சுபாஷ் கலந்துகொண்டு, திருச்சி ஏர் விங் என்சிசி கேடட்கள் மற்றும் மாணவர்களை தன்னார்வ பணியில் ஈடுபட ஊக்குவித்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் உரையாற்றினர். அதைத் தொடர்ந்து போதைப்பொருள் பாவனை, மரம் நடுதல் மற்றும் மரங்களை காப்பாற்றுதல் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணி நடைபெற்றது. சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தின நிகழ்வை ஒழுங்கமைப்பதில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை கல்லுாரி முதல்வர் பிரின்சி மெர்லின், துணை முதல்வர்கள் மற்றும் விரிவாக்க நடவடிக்கை துறை டீன் ஆனந்த் கிதியோன் ஆகியோர் பாராட்டினர். தன்னார்வத் தொண்டு செய்வதை ஊக்குவிப்பதற்காக மாணவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பிஷப் ஹீபர் கல்லூரியின் பி1 ப்ளைட் என்சிசி ஏர் விங் இணை என்சிசி அதிகாரி இம்மானுவேல் சகாயராஜ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
The post திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரியில் தன்னார்வ தொண்டர்கள் தினம் appeared first on Dinakaran.