துறையூர், டிச.7: துறையூர் அடுத்த சமத்துவபுரத்தில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. துறையூர் அடுத்த.கண்ணனூர் ஊராட்சியில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு சட்ட மாமேதை அம்பேத்கர் 68 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்பகுதியில் உள்ள ஏழை, எளியவர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துறையூர் அரசு போக்குவரத்து பணிமனை தொமுச தலைவர் சுப்பையா, வெங்கடேசபுரம் இளைஞரணி கார்த்திக் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post துறையூர் அருகே சமத்துவபுரத்தில் அம்பேத்கர் நினைவுதினம் கடைபிடிப்பு appeared first on Dinakaran.