வேதாரண்யத்தில் அம்பேத்கர் நினைவு தினம் சிலைக்கு மாலை அணிவிப்பு

வேதாரண்யம், டிச.8: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில், சட்டமேதை அம்பேத்கர் நினைவுதினத்தை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்பி பிவி ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் போஸ், நகரத் தலைவர் அர்ஜுனன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதிமுக சார்பில் நகர செயலாளர் நமச்சிவாயம், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜரத்தினம், அம்மா பேரவை இணைச் செயலாளர் மாரியப்பன், கர்ணன் ஆகியோர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிர்வாககுழு உறுப்பினர் நாராயணன், ஒன்றிய செயலாளர் பாலகுரு, ஊராட்சி தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் அம்பிகாபதி, வெற்றி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் நாகை மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

The post வேதாரண்யத்தில் அம்பேத்கர் நினைவு தினம் சிலைக்கு மாலை அணிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: