திருவாரூர், டிச. 18: ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பணி சுமையை கண்டித்து அனைத்து இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் தபால் துறை மூலம் நடைமுறையில் இருந்து வரும் ஆயுள் காப்பீட்டிற்கு அதிக அளவில் வாடிக்கையாளர்களை சேர்த்து பிரிமிய தொகையினை வசூல் செய்திட வேண்டும்.
மாதந்தோறும்100 முதல் 150 எண்ணிக்கையில் ஆர்.டி கணக்குகளை துவங்கிட வேண்டும் என்பது உட்பட அஞ்சல் ஊழியர்களுக்கான பணி சுமையை கண்டித்தும், மேற்கண்ட பணிகள் குறித்துஅவ்வப்போதுஆய்வு நடத்தி ஊழியர்களை உயர் அதிகாரிகள் ஒருமையில் பேசி வருவதை கண்டித்தும் திருவாரூரில் நேற்று தலைமை தபால் நிலையம் முன்பாக அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை கோட்ட உதவி செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய துணை பொதுச் செயலாளர் தனராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் சசிகுமார், தர்மதாஸ், இளங்கோவன், ஜெயபால், தாயுமானவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.