ரத்தம் கசிந்த நிலையில், அவர் ஜீப்பில் இருந்த 15 பயணிகளை அப்படியே விட்டுவிடாமல், அவர்களது பாதுகாப்புதான் முக்கியம் என கருதி 5 கி.மீ. தொலைவுக்கு ஜீப்பை வேகமாக ஓட்டிச் சென்றார். ஆனால், வயிற்றில் பாய்ந்த குண்டு அவரது குடல் பகுதிகளை கடுமையாக சேதமடையச் செய்துவிட்டதால், அவர் உயிருக்குப் போராடினார். அப்பகுதியை சேர்ந்த சிலர் சந்தோஷ் சிங்கை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது ஒட்டுமொத்த வயிற்றுப் பகுதியும் சேதமடைந்திருந்து இருந்ததால், மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் சிங்கின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். இதற்கிடையே சந்தோஷ் சிங் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாத தாக்குதலா? அல்லது உள்ளூர் கொள்ளை கும்பலின் தாக்குதலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது ஒரு கும்பல் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும், பக்தர்களுடன் கோயிலிலிருந்து ஹேமத்புர் வந்துகொண்டிருந்த வாகனத்தின் ஓட்டுநர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட நிலையிலும், பயணிகளைக் காப்பாற்றுவதற்காக 5 கி.மீ. தூரம் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரின் தீரம் பாராட்டுக்குரியது’ என்றார்.
The post 15 பயணிகளின் உயிரை காப்பாற்ற துப்பாக்கி குண்டு வயிற்றில் பாய்ந்த நிலையில் 5 கி.மீ தூரம் ஜீப்பை ஓட்டிச் சென்ற டிரைவர்: பீகாரில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.