டெல்லி அரசு நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பிறகே டெல்லிக்கு பேரணியாக செல்ல முடியும் என பஞ்சாப், அரியானா மாநில போலீசார் கூறி, இரு மாநில எல்லையான ஷம்புவில் தடுப்பு அரண்களை அமைத்து விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். அங்கேயே விவசாயிகள் முகாமிட்டு தங்கி உள்ளனர். இந்நிலையில், ஷம்பு எல்லையில் இருந்து 3வது முறையாக நேற்று பிற்பகலில் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்ல முயன்றனர்.
சில அடி தூரம் மட்டுமே சென்ற அவர்கள் பல அடுக்கு போலீசார், பாதுகாப்பு படையினரின் தடுப்பு அரண்கள் மூலம் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். விவசாயிகளின் இந்த போராட்டம் காரணமாக அரியானாவில் அம்பாலில் உள்ள 12 கிராமங்களில் மொபைல் இன்டர்நெட், எம்எம்எஸ் சேவைகளுக்கு வரும் 17ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 6, 8ம் தேதிகளில் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்ல முயன்று தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கிடையே பஞ்சாப்பின் கனவுரி எல்லையில் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவாலின் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் நேற்று 19வது நாளை எட்டியது.
The post டெல்லி நோக்கி பேரணி போராட்டம் ஷம்பு எல்லையில் 3வது முறை விவசாயிகள் தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.