- கேந்திரிய வித்யாலயாக்கள்
- மத்திய அமைச்சரவை
- புது தில்லி
- மோடி
- யூனியன் ரயில்
- அமைச்சர்
- அஸ்வினி வைஷ்ணவ்
- வித்யாலயா
- தின மலர்
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: 2025-26 முதல் அடுத்த 8 ஆண்டுகளில் நாடு முழுவதும் 85 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், ஏற்கனவே உள்ள ஒரு கேந்திரிய வித்யாலயாவை விரிவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 28 புதிய நவோதயா பள்ளிகளையும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மொத்த மதிப்பிடப்பட்ட நிதித் தேவை ரூ. 5,872.08 கோடி ஆகும்.
அரியானாவுடனான இணைப்பை மேம்படுத்துவதற்காக டெல்லி மெட்ரோவின் 26.46 கிமீ ரிதாலா-குண்ட்லி வழித்தடத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி மெட்ரோவின் நான்காம் கட்டத் திட்டமாக இது அமைய உள்ளது. இந்த திட்டத்திற்கான மதிப்பு ரூ.6,230 கோடி ஆகும் . இவ்வாறு அவர் கூறினார்.
The post அடுத்த 8 ஆண்டுகளில் 85 புதிய கேந்திரிய வித்யாலயா 28 நவோதயா பள்ளிகள் திறப்பு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.