×

குருந்தமலை கோயிலில் வனத்துறை வைத்த கூண்டில் 13 குரங்குகள் சிக்கியது

 

காரமடை,டிச.7:காரமடையை அடுத்துள்ள குருந்தமலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பகுதியில் சமீபகாலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்தன. பக்தர்களையும் அச்சுறுத்தி வந்தன.கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரை குரங்கு ஒன்று கடித்துள்ளது. இதனால் கோயில் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என பொதுமக்களும்,பக்தர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் காரமடை வனச்சரகர் ரஞ்சித் தலைமையில் இரு கூண்டுகள் கோவிலை ஒட்டி வைக்கப்பட்டன.அவ்வாறு வைக்கப்பட்ட கூண்டில் நேற்று ஒரே நாளில் 13 குரங்குகள் சிக்கின. இதனையடுத்து கூண்டில் சிக்கிய 13 குரங்குகளையும் வனத்துறையினர் கோத்தகிரி சாலையில் உள்ள அடர் வனப்பகுதியில் விடுவித்தனர். தமிழ்நாடு புத்தொழில் முனைவோர்களுக்கு ஆதார நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.30 கோடியும், எஸ்.சி, எஸ்.டி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.7.45 கோடியும் என மொத்தம் ரூ. 8.75 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளன

The post குருந்தமலை கோயிலில் வனத்துறை வைத்த கூண்டில் 13 குரங்குகள் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Kurundamalai ,Karamadai ,Velayudha ,Swamy ,Dinakaran ,
× RELATED மனித-வனஉயிரின மோதலை தடுக்க புதிய...