கோபி, டிச.7: ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் நாளை (8ம் தேதி) மேட்டுக்கடையில் நடைபெறுகிறது. இதுகுறித்து ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் நாளை (8ம் தேதி) காலை 10 மணிக்கு பெருந்துறை ரோடு மேட்டுக்கடை தங்கம் மஹாலில் நடைபெறுகிறது. திமுக துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி தலைமையில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும் வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி முன்னிலையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் டிசம்பர் 12ம் தேதி கேரளா மாநிலம் வைக்கத்தில் பெரியார் சிலை திறப்பு விழாவிற்கு செல்வது குறித்தும், டிசம்பர் 19ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வருகை தருவது குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெறுவதால் இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்து உள்ளார்.
The post மேட்டுக்கடையில் நாளை வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.