ஈரோடு, டிச. 6: ஈரோடு மாநகராட்சி 5வது வார்டு கங்காபுரம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சுமார் 100 குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளியின் பின்புறம் உள்ள சாலையோரத்தில், பள்ளியின் சுற்றுச்சுவரையொட்டி குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இப்பகுதியில் குப்பைகள் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும், அதனைமீறியும் அங்கு கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாததால் சமீபத்திய மழையால் அவை அழுகி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும், அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி கடும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதனால், பள்ளிக் குழந்தைகள் எளிதில் நோய் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் நிலவி வருகிறது. எனவே, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும், மீண்டும் அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post பள்ளி சுற்றுச்சுவர் அருகே குப்பைகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.