×

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவி: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்க செல்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது, பாம்புக்கடி, விஷப்பூச்சுக்கடி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்க நேரிடுகிறது. இதைத்தவிர்க்கும் வகையில், தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து கைபேசியின் மூலம் இயக்கிடவும், கண்காணிக்கவும் நிறுத்திடவும் முடியும்.

மேலும், ஆதிதிராவிடர் வகுப்பினர், பழங்குடியினர் வகுப்பினர், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் மற்றும் பெண் விசாயிகளுக்கு மொத்தவிலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7,000 மானியமாகவும், இதர விவசாயிகளுக்கு மொத்தவிலையில் 40 சதவீதம்அல்லது ரூ.5,000 மானியமாக தற்போது வேளாண்மைப்பொறியியல்துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் வேளாண்மைப்பொறியியல்துறையின் கீழ்க்கண்ட அலுவலர்களை தொடர்புக்கொண்டு பயனடையலாம். விவசாயிகள், செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப்பொறியியல் துறை, 487, அண்ணாசாலை, நந்தனம் சென்னை-35 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், உதவிசெயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை, மதுராந்தாகம் (இருப்பு) சிலாவட்டம், என்ற முகவரியிலும், 90030 90440 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவி: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu District ,Collector ,Arunraj ,Dinakaran ,
× RELATED உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்...