×

விளையாட்டு போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவர்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட அளவிலான போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளுடன் போட்டியிட்டு மறைமலைநகர் நின்னைக்கரை அரசு நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவி ராஜஸ்ரீ தாம்பரம் சானடோரியத்தில் நடந்த டேக்குவாண்டோ தற்காப்புக்கலை கராத்தே போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், அதே போட்டியில் 7ம் வகுப்பு மாணவி அக்சயா வெள்ளிப்பதக்கமும் வென்றனர். கோவளத்தில் நடைபெற்ற பீச் வாலிபால் போட்டிகளில் நின்னைக்கரை நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு பிரதீபா 7ம் வகுப்பு கவுசிகா இணைந்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மாணவியருடன் போட்டியிட்டு வெண்கலப் பதக்கமும், ஆண்கள் பிரிவில் 8ம் வகுப்பு மாணவர் ராகுல் 7ம் வகுப்பு மாணவர் அருண் இணைந்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மாணவியருடன் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்டக்கல்வி அலுவலர் அரவிந்தன் வட்டாரக்கல்வி அலுவலர் காஞ்சனா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தேவகி, தலைமை ஆசிரியர் சீனிசந்திரசேகரன் ஆகியோர் பாராட்டினர்.

The post விளையாட்டு போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Nimamalai Nagar Government Middle School ,Rajashree Tambaram Sanatorium ,Taekwondo Martial Arts Karate ,Dinakaran ,
× RELATED ஒரு பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 ;...