- அம்மையார்குப்பம் ஏரி
- ஆர்.கே. பத்தா
- கித்தா
- பெஞ்சல் புயல்
- ஆர்.கே.பேட்டை
- திருவள்ளூர் மாவட்டம்
- அம்மையார்குப்பம்
- கிடா வெட்டி
ஆர்.கே.பேட்டை: பெஞ்சல் புயல் கனமழையால், அம்மையார்குப்பம் ஏரி தொடர்ந்து 5ம் ஆண்டாக நிரம்பியதால், கிராம மக்கள் கிடா வெட்டி கொண்டாடினர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், நீர்நிலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி காணப்பட்டது. இதில், ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி, தொடர்ந்து 5ம் ஆண்டாக தண்ணீர் நிரம்பி உபரிநீர் கடவாசல் வழியாக செல்வதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 5ம் ஆண்டு தொடர்ச்சியாக ஏரி நிரம்பியுள்ளதை அடுத்து திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் தலைமையில், நேற்று கிராம பொதுமக்கள் ஏரி கடை வாசல் பகுதியில் மலர்தூவி, கிடா வெட்டி மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்ந்தனர். திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் சார்பில் மதியம் 1000க்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்துடன் உபசரிக்கப்பட்டது.
The post அம்மையார்குப்பம் ஏரி நிரம்பியதால் கிடா வெட்டி கொண்டாட்டம் appeared first on Dinakaran.