×

மகளிர் காவல் நிலையம் அமைப்பது குறித்து செங்குன்றத்தில் காவல் ஆணையர் ஆய்வு

புழல்: செங்குன்றம் காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேரில் ஆய்வு செய்தார். செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையம் பொன்னேரியில் செயல்பட்டு வருகிறது. இதனால் செங்குன்றம், வடகரை, வடபெரும்பாக்கம், அழிஞ்சிவாக்கம், சென்றம்பாக்கம், விளங்காடுபாக்கம், தீர்த்தங்கரையம்பட்டு புள்ளி லைன், பம்மது குளம், பாடியநல்லூர், அலமாதி, நல்லூர், கும்மனூர், சோழவரம் உள்பட பல்வேறு பகுதி மக்கள் புகார்கள் தெரிவிக்க பொன்னேரி சென்று வருவதற்கு சிரமமாக உள்ளதாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கருக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தன.

அதன்படி, செங்குன்றம் காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பின்னர், செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் ஜிஎன்டி சாலை ஆகிய பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, போக்குவரத்து நெரிசலை எப்படி தடுப்பது என்பது குறித்தும் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது செங்குன்றம் போலீசில் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post மகளிர் காவல் நிலையம் அமைப்பது குறித்து செங்குன்றத்தில் காவல் ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Avadi ,Police Commissioner ,Shankar ,Vertical Police Station ,BONNERI ,Dinakaran ,
× RELATED ஆவடி மாமன்ற கூட்டத்தில் 119 தீர்மானம் நிறைவேற்றம்