×

ஆர்.கே பேட்டை ஒன்றியத்தில் சத்துணவு பணியாளர்களுக்கு ஆலோசனை

ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பணி புரியும் சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். இதில் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் உள்ள சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மழை காரணமாக அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு குடி தண்ணீர் காய்ச்சி வடிகட்டி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது சமையல் உதவியாளர்கள் சத்துணவு கூடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், அரசு விதிகளின்படி தேவையான உணவை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

The post ஆர்.கே பேட்டை ஒன்றியத்தில் சத்துணவு பணியாளர்களுக்கு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : RK Pettah Union ,RK Pettah ,MGR ,Tiruvallur district ,District Development Officer ,Kalachelvi ,
× RELATED மூழ்கிய தரைப்பாலத்தால் மக்கள் அவதி: உயர்த்தி அமைக்க கோரிக்கை