பகத்சிங்கிற்கு எதிராக ஆட்சேபகரமான கருத்து பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசின் அட்வகேட் ஜெனரல் அஸ்கர் லெகாரி கடந்த மாதம் லாகூர் உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கிற்கு எதிராக சில ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறுகையில், ‘‘ பாகிஸ்தானில் பகத் சிங்கிற்கு எதிராக வெளியிடப்பட்ட ஆட்சேபகரமான கருத்துக்கள் தொடர்பான சமீபத்திய அறிக்கைகளை இந்திய அரசாங்கம் கவனித்துள்ளது. தூதரக வழிகள் மூலம் இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. பகத் சிங்கின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அரசாங்கமும் முழு தேசமும் அங்கீகரிக்கிறது’’ என்றார்.

The post பகத்சிங்கிற்கு எதிராக ஆட்சேபகரமான கருத்து பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: