×

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: ஹாரி புரூக் அதிரடி சதம் விளாசல்

வெலிங்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நிலையில் 2வது டெஸ்ட் வெலிங்டனில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் ரன் எதுவும் எடுக்காமலும், சாக் கிராலி 17 ரன்னிலும் மாட் ஹென்றி பந்தில் அவுட் ஆகினர். பின்னர் வந்த ஜேக்கப் பெத்தேல் 16, ஜோ ருட் 3 ரன்னில் நாதன் ஸ்மித் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 43 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் ஜோடி சேர்ந்த ஹாரி புரூக்-ஒல்லி போப் அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஹாரி புருக் 91 பந்தில் சதம் விளாசினார். இது அவருக்கு 8வது டெஸ்ட் சதமாகும். இருவரும் 5 வது விக்கெட் பார்ட்னர் ஷிப்பில் 174 ரன் எடுத்த நிலையில் ஒல்லி போப் 66 ரன்னில் (78 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆனார். புரூக் 123 ரன்னில் (115 பந்து, 11 பவுண்டரி,5 சிக்சர்) ரன்அவுட் ஆனார். கேப்டன் பென் ஸ்டோக் 2, கிறிஸ் வோக்ஸ் 18, கஸ் அட்கின்சன் 4,பிரைடன் கார்ஸ் 9 ரன்னில் அவுட்ஆகினர். 54.4 ஓவரில் 280 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து பவுலிங்கில் நாதன் ஸ்மித் 4, வில் ஓ ரூர்க் 3, மாட் ஹென்றி 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது.

The post நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: ஹாரி புரூக் அதிரடி சதம் விளாசல் appeared first on Dinakaran.

Tags : Zealand ,Harry Brook ,Wellington ,England cricket ,New Zealand ,England ,Christchurch ,
× RELATED தொடர் நாயகன் ஹாரி புரூக்