×

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

 

பெ.நா.பாளையம், டிச.6: கோவை துடியலூர் நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்த பகுதிகளில் சி.எஸ்.ஐ, ரோமன் கத்தோலிக்கர், டி.இ.எல்.சி உட்பட பல ஸ்தாபனத்தின் கிறிஸ்தவ ஆலயத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் துடியலூர் என்ஜிஜிஓ காலனியில் உள்ள அகில இந்திய குடும்ப ஜெப ஐக்கிய ஆலயத்தை சேர்ந்தவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கிறிஸ்துவர்கள் வீடுகளில் வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கினர். தொடர்ந்து, நடனமாடி குழந்தைகள் மற்றும் பெரியவர்களை மகிழ்வித்தனர்.

The post கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Santa Claus ,BNA ,Palayam ,Christmas ,Narasimmanayakanpalayam ,Periyanayakanpalayam ,Coimbatore ,Christian ,CSI ,Roman Catholic ,DELC ,Santa ,
× RELATED பரங்கிமலை காவல்நிலையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்