×

இழப்பீடு தராமல் இழுத்தடிப்பு பழநியில் ஒரே வழக்கிற்கு 2 பஸ்கள் ஜப்தி

பழநி, டிச. 6: பழநியில் இழப்பீடு தராமல் இழுத்தடித்ததால் ஒரே வழக்கிற்கு 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன. ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (55). மொத்த ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி பழனிச்சாமி தனது காரில் ஒட்டன்சத்திரம்- வேடசந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பஸ் இவரது கார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி உயிரிழந்தார்.

இவ்வழக்கில் இழப்பீடு கேட்டு அவரது மனைவி மயிலாத்தாள் பழநி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து மயிலாத்தாள் தரப்பில் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி 2 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நேற்று நீதிமன்ற ஊழியர்கள் பழநி பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 பஸ்களை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.

The post இழப்பீடு தராமல் இழுத்தடிப்பு பழநியில் ஒரே வழக்கிற்கு 2 பஸ்கள் ஜப்தி appeared first on Dinakaran.

Tags : Palani ,Palanichamy ,Odaipatti ,Othanchatram ,Dinakaran ,
× RELATED இடைத்தரகர்களை நாடாமல் விவசாயிகள்...