ஒன்றிய நிதி அமைச்சர் தலைமையில் பட்ஜெட் ஆலோசனை இன்று தொடங்குகிறது

புதுடெல்லி: பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறியும் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடங்குகிறது. 2025-26ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளை ஒன்றிய நிதி அமைச்சகம் இன்று தொடங்க இருக்கிறது. முதல்கட்டமாக பிரபல பொருளாதார நிபுணர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்க இருக்கிறது.

இதைத் தொடர்ந்து, விவசாயிகள் சங்கங்கள் மற்றும் விவசாய பொருளாதார நிபுணர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருடனான சந்திப்பு நாளை நடக்க உள்ளது. பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்கள் வரும் 30ம் தேதி நிறைவடையும். இதில், தொழில்துறை, கல்வி, சுகாதாரத்துறை தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களை அரசு கேட்டறிந்து பட்ஜெட்டை தயாரிக்கும்.

The post ஒன்றிய நிதி அமைச்சர் தலைமையில் பட்ஜெட் ஆலோசனை இன்று தொடங்குகிறது appeared first on Dinakaran.

Related Stories: