காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் பல்வேறு பகுதிகளில் உள்ள நிலையில், அவை வாடகைக்கு விடப்பட்டு அதன் மூலம் மாநகராட்சி வருவாய் ஈட்டி வந்தன. இந்த நிலையில், கடந்த ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய பணம் பல கோடி ரூபாய் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மாநகராட்சி ஆணையர் ரவீந்திரன் உத்தரவின்படி மாநகராட்சி இணை ஆணையர் தலைமையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பகுதியில் பெருத்தளவு வாடகை பாக்கி இருந்த 7 கடைகள் ஆண்டு கணக்கில் வாடகை பாக்கி செலுத்தாமல் சுமார் ரூ1 கோடியே 30 லட்சம் வாடகை பாக்கி இருந்த நிலையில் கடைகள், உணவகம் உள்ளிட்டவைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகளால் போலீசார் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது.
இதனால் வாடிக்கைதாரர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதங்களும் நிகழ்ந்தன. இதனையெடுத்து, அசலில் பாதி அளவு பணம் கட்டினால் மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு 7 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டன. பொதுமக்கள் அதிகம் கூடும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் திடீரென போலீசார் குவிக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகளால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
The post காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ1.30 கோடி வாடகை பாக்கி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.