திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், ‘மண் வளம் காப்போம்’ என்ற தலைப்பில் வேளாண் மாணவர் பேரணி நேற்று நடத்தினர்.காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் கல்லூரியின் வேளாண்மை படிப்பின் இறுதியாண்டு மாணவர்கள் 11 பேர் திருக்கழுக்குன்றத்தில் 90 நாட்கள் தங்கி இங்குள்ள விவசாயப் பணிகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தும், விவசாயம் பற்றி ஆய்வு செய்தும் வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ‘மண் வளம் காப்போம்’ என்ற தலைப்பில் பேரணி நேற்று நடந்தது. திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி பேருந்து நிலையம் வழியாக சென்று வேதகிரீஸ்வரர் மலையடிவாரத்தில் முடிவடைந்தது.
பேரணியின்போது, மண் வளத்தை காத்தால் தான், விவசாயம் மேம்படும், இதனால் அனைவரும் மண் வளத்தை காக்க வேண்டும் என்ற கோஷங்கள் முழங்கியவாறும், பதாகைகளை ஏந்தியவாறும் சென்றனர். இப்பேரணியில், வேளாண் மாணவர்கள் மற்றும் பிளஸ்ஸிங் பள்ளி மாணவ- மாணவிகள் 150 பேர் மற்றும் பள்ளியின் முதல்வர் சோபியா அன்புச் செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post வேளாண் மாணவர் பேரணி appeared first on Dinakaran.