பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் இரு செயற்கைக் கோள்களும் சரியான பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!!

பெங்களூரு : பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் இரு செயற்கைக் கோள்களும் சரியான பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் செய்யப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 61வது முறையாக பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது என்றும் சூரிய ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்யும் புரோபா-3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு தனது பாராட்டுகளையும் அவர் குறிப்பிட்டார்.

The post பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் இரு செயற்கைக் கோள்களும் சரியான பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!! appeared first on Dinakaran.

Related Stories: