×

ஒட்டன்சத்திரம் விருப்பாட்சியில் சாலை தரம் உயர்த்த அடிக்கல் நாட்டு விழா

ஒட்டன்சத்திரம், டிச. 5: ஒட்டன்சத்திரம் ஒன்றியம் விருப்பாட்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி முயற்சியில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் விருப்பாட்சி தலையூத்து ஆறு சாலை மற்றும் வடமதுரை ஒட்டன்சத்திரம் சாலையில் இருந்து சட்டையப்பனூர் செல்லும் சாலை உள்ளிட்டவைகளை தரம் உயர்த்தும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் தர்மராஜன் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல், உதவி பொறியாளர் நாகநாதன், ஒன்றிய துணை செயலாளர் முருகானந்தம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாலதி வெண்ணிலா, சாரதா சிவராஜ்,

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, ஊராட்சி செயலர் பிச்சைமணி, நிர்வாகிகள் ஆறுமுகம், கிருஷ்ண மூர்த்தி, பழனிச்சாமி, ஆறுமுகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரம் விருப்பாட்சியில் சாலை தரம் உயர்த்த அடிக்கல் நாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Foundation ,Otanchatram ,Othanchatram ,Food and Nutrition ,Minister ,A. Chakrapani ,Thalayuthu Aru Road ,Vadamadurai Ottenchatram road ,Chattiahpanur ,NABARD ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே தொடர் நகை...