- மனித உரிமைகள் ஆணையம்
- ஐகோர்ட் கிளை நடவடிக்கை
- சென்னை
- ஐகோர்ட் கிளை
- ஷோபனா
- மதுரை மாவட்டம்
- Wadipatti
- தின மலர்
சென்னை: ராணுவ வீரரை தாக்கிய விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும் மனித உரிமை ஆணைய உத்தரவை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. சென்னை சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் ஷோபனா. இவர் மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் எஸ்ஐயாக பணியாற்றியபோது, ராணுவ வீரர் ஒருவரை தாக்கியதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், ராணுவ வீரருக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், இதில் ரூ.50 ஆயிரத்தை ஷோபனாவின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யவும், அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்குமாறும் கடந்த 4.6.2013ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஷோபனா, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியா கிளெட் ஆகியோர், ‘‘துறைரீதியாக நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்கு உரிய விளக்கம் அளிக்கப்படாவிட்டால், துறைரீதியான நடவடிக்கையை தொடர்வதில் எந்தவித பலனும் இல்லை என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் கூறியுள்ளது.
இந்த மனு 2013ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை. ஆனாலும், 11 ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அபராத தொகை மனுதாரரிடம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால், துறைரீதியான நடவடிக்கை என்ற இரட்டை தண்டனையை அனுமதிக்க வேண்டியதில்லை. எனவே, மனுதாரர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.
The post ராணுவ வீரரை தாக்கிய விவகாரம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் மனித உரிமை ஆணைய உத்தவு ரத்து: ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.