கோவை, டிச. 2: பெஞ்சல் புயல் காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் நேற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாநகரில் கவுண்டம்பாளையம், சாய்பாபாகோவில், வடகோவை, உக்கடம், டவுன்ஹால், குனியமுத்தூர், போத்தனூர், சிங்காநல்லூர், பீளமேடு என அனைத்து பகுதியிலும் லேசான மழை பெய்தது. புறநகர் பகுதியிலும் லேசான மழை பொழிவு இருந்தது. மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவியது.
தொடர்ந்து இன்று, நாளை என இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசர கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு பொதுமக்கள் 1077 மற்றும் 0422-2306051 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும், கோவை மாநகராட்சி அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு 0422-2302323 மற்றும் 81900-00200 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் மழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
The post கோவையில் லேசான மழை appeared first on Dinakaran.