- ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு
- தர்ணா
- திண்டுக்கல்
- திண்டுக்கல் நாகல்நகர்
- தமிழ்நாடு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு
- ஜேம்ஸ் கஸ்பர் ராஜ்
- மாவட்ட துணைத் தலைவர்
- ஜெயசீலன்
- தின மலர்
திண்டுக்கல், டிச. 4: திண்டுக்கல் நாகல் நகரில் தமிழ்நாடு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கஸ்பர் ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ஜெயசீலன் துவக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் கேசவன் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார். சங்க நிர்வாகிகள் மாணிக்கம், ராஜேந்திரன், ஜேம்ஸ் அந்தோணி ராஜ், செல்வராஜ் முன்னிலை வகித்தனர். பல்வேறு சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியம், ராஜேந்திரன், பொன்ராஜ், முபாரக் அலி வாழ்த்துரை வழங்கினர்.
மாநில தலைவர் மோசஸ் நிறைவுறையாற்றினார். போராட்டத்தில் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு நிலுவை தொகையினை வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போல் பொது துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் நிபந்தனையின்றி அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மாவட்ட பொருளாளர் அமல்ராஜ் நன்றி கூறினார்.
The post திண்டுக்கல்லில் ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா appeared first on Dinakaran.