×

திண்டுக்கல்லில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், டிச. 4: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் நேற்று பெருந்திரள் முறையீடு நடந்தது. மாவட்ட தலைவர் ரோனிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் ஜோஸ்பின் அமலா, பொருளாளர் போதும் பொண்ணு, துணை தலைவர்கள் சிலம்பாயி, மனோரஞ்சிதம் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 3 ஆண்டுகளாக காலியாக உள்ள 3,500 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும்.

பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். துணை செவிலியர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து துணை சுகாதார நிலையங்களுக்கு பணியிடை மாற்றம் செய்ய கூடாது. கூடுதல் துணை சுகாதார நிலையங்களுக்கு பொறுப்பு பணியை செய்ய கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில்இணை செயலாளர்கள் பாண்டிமாதேவி , அன்னலட்சுமி, பிரசார செயலாளர் கிறிஸ்டி தங்கம் , அமைப்பு செயலாளர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Tamil Nadu Government Grama Health Nurses Association ,Tamil Nadu Public Health Nurses Federation ,Dindigul Collector's Office ,District ,President ,Ronickam ,Josephine ,
× RELATED வீட்டிலிருந்து அரசியல் செய்வது விஜய்...