- தேவரியம்பாக்கம் ஊராட்சி
- வாலாஜாபாத்
- தேவராயம்பாக்கம்
- காஞ்சிபுரம் மாவட்டம்
- Walajabad
- யூனியன்
- தோண்டாங்குளம்
- கொசபாடு
- தின மலர்
வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தேவரியம்பாக்கம், தொண்டங்குளம், கொசப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் அரசு கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் மட்டுமின்றி அரசு கைவிடப்பட்ட இடங்களில் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டு இதுவரை நான்கு குறுங்காடுகள் உருவாக்கி அதனைத் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் நேற்று ஊராட்சி சார்ந்த பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த பெண்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று கூடி சாலை ஓரம் மற்றும் ஏரிக்கரை பகுதி மற்றும் நீர்வரத்து கால்வாய் பகுதிகளில் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, 12 ஆயிரம் பனை விதைகள் ஊராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உதவி வேளாண் தோட்டக்கலை அலுவலர் அமுதா, உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post தேவரியம்பாக்கம் ஊராட்சியில் 12 ஆயிரம் பனை விதைகள் நடவு appeared first on Dinakaran.