- விவேகானந்தா வித்யாலயா பள்ளி தேர்வு ஏ
- டிஜிபி
- மதுராந்தகம்
- சிறீந்திரபாபு
- விவேகானந்த வித்யாலயா பள்ளி
- மதுராந்தகம்
- மதுரதங்கம்
- விவேகானந்த வித்தியாலய மெட்ரிகுலேசன்
- சிபிஎஸ்இ பள்ளிகள்
- விவேகானந்தா வித்யாலயா பள்ளி தேர்வு விழா கருத்தரங்கு
- முன்னாள் DGP
- தின மலர்
மதுராந்தகம்: மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி சார்பில் நடைபெற்ற தேர்வு ஓர் திருவிழா கருத்தரங்கத்தில், முன்னாள் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு, மாணவர்களுக்கு தேர்வு எழுதுவது குறித்து பயிற்சி அளித்தார். மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சார்பில், `தேர்வு ஓர் திருவிழா’ என்ற தலைப்பில் அரசு பொதுத்தேர்வில் தேர்வு எழுதுவது குறித்து கருத்தரங்கம், மதுராந்தகம் அருகே நேற்று நடைபெற்றது. விவேகானந்தா குழும பள்ளி தாளாளர் லோகராஜ் தலைமை தாங்கினார். இயக்குநர் மங்கையர்கரசி, தாளாளர் ஹரிநாக்ஷி, முதுநிலை முதல்வர் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் கீதா அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு, `தேர்வு ஓர் திருவிழா’ என்ற தலைப்பில் அரசு பொதுத்தேர்வில் தேர்வு எழுதுவது குறித்து கருத்தரங்கத்தினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது, அரசு பொதுத்தேர்வுகளை எழுதுவது குறித்தும், அதிக மதிப்பெண் பெற தேவையான யுக்திகள், ஞாபகசக்தி, தியானம், படிக்கும் முறைகள், படிப்பில் ஆர்வம் ஆகியவை குறித்தும் மாணவர்களிடையே விளக்கி பேசினார். இதனைத்தொடர்ந்து, கல்வி அறிவு சார்ந்த கேள்விகளை மாணவர்களிடையே எழுப்பி, பதிலளித்த மாணவ – மாணவிகளுக்கு புத்தகத்தை பரிசாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாணவ – மாணவிகள், மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். முடிவில், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சீதாலட்சுமி நன்றி கூறினார்.
The post விவேகானந்தா வித்யாலயா பள்ளி சார்பில் தேர்வு ஓர் திருவிழா கருத்தரங்கம்: முன்னாள் டிஜிபி பங்கேற்பு appeared first on Dinakaran.