அமெரிக்காவுக்கு முக்கிய கனிமங்கள் ஏற்றுமதிக்கு சீனா தடை


பெய்ஜிங்: அமெரிக்கா சமீபத்தில் சீன நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு அந்த நிறுவனங்களுக்கு கணிணி சிப் தயாரிக்கும் உபகரணங்கள், மென்பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி அல்லது விற்பனை செய்யக்கூடாது என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு உயர் தொழில்நுட்ப பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு சீனா தடை விதித்துள்ளது.

சீன வர்த்தக அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், அமெரிக்காவுக்கான, காலியம், ஜெர்மானியம், ஆன்டிமனி ஆகிய முக்கிய கனிமங்கள் மற்றும் இதர உயர் தொழில்நுட்ப பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

The post அமெரிக்காவுக்கு முக்கிய கனிமங்கள் ஏற்றுமதிக்கு சீனா தடை appeared first on Dinakaran.

Related Stories: