- கார்த்திகை மாத முகூர்த்த நாள்
- சென்னை
- சுபமுகூர்த்த நாள்
- பதிவு துறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கார்த்திகை
- முகூர்த்த நாள்
சென்னை: சுபமுகூர்த்த தினத்தில் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு டிச.5-ல் தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. கார்த்திகை, முகூர்த்த நாளை ஒட்டி டிச.5-ல் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என்பதால் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்துள்ளது.
சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம்.
தற்போது கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான டிசம்பர் 5ம் தேதி அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் டோக்கன்கள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைஏற்று ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படும். 2 சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படும். அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன் வழங்கப்படும். 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
The post கார்த்திகை மாத முகூர்த்த தினம்: சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு appeared first on Dinakaran.