×

வாழைத்தண்டு மோர் கஞ்சி

தேவையானவை:

வாழைத்தண்டு – சிறிய துண்டு,
மோர் – ஒரு கப்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாழைத்தண்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும். அதோடு மோர், உப்பு சேர்த்து பருகினால், நீரிழிவு நோய், சிறுநீரக பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வெறும் வாழைத்தண்டு மோர் அருந்த விருப்பமில்லாதவர்கள், புழுங்கலரிசி நொய்க் கஞ்சியையோ, பச்சரிசி நொய்க் கஞ்சியையோ அரை கப் சேர்த்துக் கலக்கி சாப்பிடலாம்.இன்னும் சொல்லப் போனால், இட்லி இருந் தால் அதைக் கூட சிறு துண்டுகளாக உதிர்த்து, வாழைத்தண்டு மோரில் சேர்த்து சாப்பிடலாம். வாழைத்தண்டுக்கு பதிலாக, வாழைப்பூவை மிக்ஸியில் அடித்து சாறெடுத்து, அத்துடன் மோர், உப்பு கலந்து பருகினால் பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது.

The post வாழைத்தண்டு மோர் கஞ்சி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED காலமறிந்து களம் காணும் மகரம்