×

பின்னி கால்வாயில் மூதாட்டி சடலம்

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு எம்.எஸ்.முத்து நகர் மசூதி பின்புறம் உள்ள பின்னி கால்வாயில் கிடந்த பெண்ணின் உடலை புளியந்தோப்பு போலீசாரும் வண்ணாரப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் சென்று மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து நடத்திய விசாரணையில், இறந்தவர் புளியந்தோப்பு கன்னிகாபுரம் வெங்கடேசபுரம் புதிய காலனியை சேர்ந்த மங்கள லட்சுமி (65) என்று தெரிந்தது. இவரது கணவர் பாலசுந்தரம், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்தார். நிர்மலாதேவி என்ற மகளும் யோகானந்தம் என்ற மகனும் உள்ளனர். தனது பேரன் கருணாகரனுடன் வசித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, மூதாட்டி எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பின்னி கால்வாயில் மூதாட்டி சடலம் appeared first on Dinakaran.

Tags : Ancestor ,Binhi Canal ,Perampur ,Chennai ,Pulianthopu ,BINI CANAL ,MUTHU ,NAGAR ,PULIANTHOPU POLICE ,VANNARAPET FIRE AND ,PAKAM GOVERNMENT HOSPITAL ,Moodati ,
× RELATED சிகிச்சைக்கு வந்த மூதாட்டி...