டெல்லி: இந்திய – சீன உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லை பிரச்னையை தீர்க்க பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன என மக்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். எல்லைப் பகுதியில் இயல்பு நிலை திரும்ப உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளை நிர்வாகம் செய்வதில் பரஸ்பர ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக இந்த பிரச்னைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மீதமுள்ள சிக்கல்களை தீர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தெரிவித்தார்.
The post இந்திய – சீன உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: மக்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் பேச்சு appeared first on Dinakaran.