மகாராஷ்டிரா காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்த நிலையில், ஷிண்டேவின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால் அவர் தானேயில் உள்ள ஜூபிடர் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக கடந்த 4 நாட்களாக ஏக்நாத் ஷிண்டே ஓய்வில் இருந்தார். ஆனால் நேற்றிரவு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, இன்று முதல் அவர் மீண்டும் அரசியல் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பதவிகள் மற்றும் பிற அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்க சிவசேனா தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் ஆன்லைன் கூட்டத்தை ஏக்நாத் ஷிண்டே இன்று மேற்கொள்ள இருந்தார். ஆனால் தற்போது மீண்டும் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் இந்த சந்திப்பு நடக்குமா, நடக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் புதிய அரசின் பதவியேற்பு விழா மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது.

The post மகாராஷ்டிரா காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: