டெல்லி: ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய குழு தமிழ்நாடு வருகிறது. புயல் பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய குழுவை அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று கோரியிருந்த நிலையில் குழு வருகிறது. ஒன்றிய குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்புவது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் இன்று ஆலோசனை மேற்கொண்டது. அதில், 3 குழுக்களை தமிழ்நாட்டுக்கு அனுப்ப ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
The post ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை பார்வையிட தமிழ்நாடு வருகிறது ஒன்றிய குழு..!! appeared first on Dinakaran.