மணிகண்டம் அருகே முருகன் கோயிலில் சோமவார விழா

மணிகண்டம், டிச.3: திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள தீரன் மாநகரில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி இருக்கும் சுப்பிரமணிய சாமிக்கு கார்த்திகை சோமவார பூஜை நேற்று நடைபெற்றது. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூஜைகள் மற்றும் 108 சங்குகள் வைத்த பூஜை செய்யப்பட்ட சிறப்பு தீர்த்ததில் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்ட மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தீரன் மாநகர் நாகமங்கலம் ஆலம்பட்டி புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை சோமவார பூஜை ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

The post மணிகண்டம் அருகே முருகன் கோயிலில் சோமவார விழா appeared first on Dinakaran.

Related Stories: