- ரெயின்போ மன்றம்
- குன்னலூர் நடுநிலைப்பள்ளி
- முத்துபேட்டை
- பஞ்சாயத்து
- யூனியன் நடுநிலைப்பள்ளி
- குன்னலூர்
- முத்துப்பேட்டை
- திருவாரூர் மாவட்டம்
- முதல்வர்
- முருகேசன்
- வானவில்
- அன்பராசி
முத்துப்பேட்டை, டிச.3: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று வானவில் மன்றம் தலைமையாசிரியர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் வானவில் மன்ற கருத்தாளர் அன்பரசி மாணவர்களுக்கு பெரிஸ்கோப் வடிவமை ப்பு, அது செயல்படும் விதம், நீர்மூழ்கி கப்பலில் அதன் பயன் பற்றியும் பக்க இணைப்பு, தொடர் இணைப்பு பற்றியும், எலும்பு மண்டலம் அதன் அமைப்பு, எலும்புகளின் வகை பற்றியும், ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஆக்ஸிஜன் ஒடுக்கம் பற்றியும், கணிதத்தில் பின்னக் கூட்டல் மற்றும் கழித்தல் பற்றியும், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கமளித்தார். மாணவர்கள் கரு த்தாளர் கேட்கும் கேள்வி களுக்கு ஆர்வத்தோடு பதில் அளித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
The post குன்னலூர் நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் appeared first on Dinakaran.