- மாற்றுத்திறனாளிகள் தினம்
- மு.கே ஸ்டாலின்
- ஜனாதிபதி
- of
- மாற்றுத்திறனாளிகள் சங்கம்
- சென்னை
- நிலை
- தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு சங்கம்
- தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம்
- ரெவ்.
- தங்காணம்
- ஜனாதிபதி
- மாற்றுத்திறனாளிகள் சங்கம்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவரும், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி நல வாரிய உறுப்பினருமான ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் பொற்கால ஆட்சியில் ஊனம் என்ற சொல்லை நீக்கி மாற்றுத்திறனாளிகள் என பெயர் சூட்டியும், அவர்களுக்கான தனித்துறையைக் கண்டு, தனி நல வாரியம் அமைத்தும், அத்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை வாரி வழங்கி மாற்றுத்திறனாளிகளின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது வழியில் திராவிட மாடல் ஆட்சியின் துறை அமைச்சரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மலர பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களான, ஒருகால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா இணைப்புச் சக்கர ஸ்கூட்டி, தன்னார்வ தொண்டும் மூலம் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளில் தங்கிப் பயிலும் மனவளர்ச்சி குன்றியோருக்கான மதிய உணவு திட்டம், கடும் மாற்றத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 மற்றும் ரூ.1500 உயர்த்தி வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விபத்து இறப்பு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்குதல், கல்வி உதவித்தொகை 2 மடங்கு உயர்த்தி வழங்குதல் போன்ற திட்டங்களை தொடர்ந்து அறிவித்து செயலாக்கம் செய்து வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தில், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வணங்கி மகிழ்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றம்: மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர் அறிக்கை appeared first on Dinakaran.