×

லேஸ் சாப்பிடுவதை கண்டித்ததால் மாத்திரைகளை சாப்பிட்டு சிறுமி தற்கொலை முயற்சி

பெரம்பூர்: வியாசர்பாடி பி.வி காலனி பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவரது கணவர் செல்வகுமார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வாகன விபத்தில் இறந்துவிட்டார். சரண்யா அருகில் உள்ள லெதர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகள் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி சிறுமி லேஸ், குர்குரே போன்ற பாக்கெட் உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் தாய் சிறுமியை கண்டித்துள்ளார். இதன் காரணமாக மனம் உடைந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டிலிருந்த தைராய்டு மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சரண்யா, மகளை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிறுமி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லேஸ் சாப்பிடுவதை கண்டித்ததால் மாத்திரைகளை சாப்பிட்டு சிறுமி தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Perambur ,Saranya ,Vyasarpadi ,PV Colony ,Selva Kumar ,
× RELATED வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய...