×

பழநி அருகே விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் திடீர் ஆய்வு

பழநி, டிச. 3: பழநி அருகே வரதமாநதி அணை பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் கீழ் விலங்குகள் பாதுகாப்பு மையம் உள்ளது. இங்கு நாய், பூனை, கழுதை என பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த தனியார் விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள விலங்குகள் சரியாக பராமரிப்பு செய்வதில்லை என தமிழக பிராணிகள் நலவாரியத்துக்கு புகார் வந்தது.

மேலும் உடுமலையை சேர்ந்த ராணி என்பவரும் இந்த தனியார் விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் உயிரினங்களுக்கு போதிய உணவு வழங்குவதில்லை என குற்றம்சாட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் பிராணிகள் நலவாரிய அறிவுறுத்தல்படி பழநி கால்நடை உதவி இயக்குநர் சுரேஷ் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட தனியார் விலங்குகள் பாதுகாப்பு மையத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவு, பராமரிப்பு விதம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

The post பழநி அருகே விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Animal Protection Center ,Palani ,Varadamanadi dam ,Dinakaran ,
× RELATED இடைத்தரகர்களை நாடாமல் விவசாயிகள்...