×

திருப்பூர் ரயில் நிலையத்தில்எய்ட்ஸ் தின உறுதிமொழி விழிப்புணர்வு

 

திருப்பூர், டிச. 3: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி டாக்டர். கலைச்செல்வன் தலைமை தாங்கி பேசினார். ரயில் நிலையை சூப்பிரண்டு வினி தாமஸ் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து அனைவரும் எய்ட்ஸ் தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.இதன் பின்னர் ரயில் நிலைய பயணிகளுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இதில் லேப்-டெக்னீசியன் அகிலாண்டேஸ்வரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ரயில் பயணிகளின் சந்தேகங்களுக்கும் அதிகாரிகள் பதில் அளித்தனர்.

The post திருப்பூர் ரயில் நிலையத்தில்எய்ட்ஸ் தின உறுதிமொழி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : AIDS Day ,Tirupur Railway Station ,Tirupur ,World AIDS Day ,Dr. ,Kalachelvan ,Superintendent ,Vini Thomas ,
× RELATED திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினம்