- உலக எய்ட்ஸ் தினம்
- திருமுங்கலம் அரசு மருத்துவமனை
- திருமங்கலம்
- ART மையம்
- அரசாங்க மருத்துவமனை
- தலைமை மருத்துவ அதிகாரி
- ராம்குமார்
- மருத்துவ அதிகாரி
- செல்வராஜ் மனோகரன்
- உலகம்
- தின மலர்
திருமங்கலம், டிச. 3: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ஏஆர்டி மையம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதுகுறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, தலைமை மருத்துவர் ராம்குமார் தலைமை வகித்தார். ஏஆர்டி மைய மருத்துவ அலுவலர் செல்வராஜ் மனோகரன் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுவதன் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். அவர் பேசுகையில், ‘‘எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் எடுத்த சீரிய நடவடிக்கை காரணமாக, இந்தியாவில் 0.23 மற்றும் தமிழ்நாட்டில் 0.167 சதவீதமாக நோய் பாதிப்பு குறைந்துள்ளது.
ஹெச்ஐவி தொற்றுள்ள தாய்மார்களிடமிருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு தொற்று பரவாமல் தடுப்பதில், தமிழகம் மிகவும் முன்னேறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் திருமங்கலத்தில் எந்த குழந்தையும் ஹெச்ஐவி தொற்றுடன் பிறக்கவில்லை’’ என்றார். தொடர்ந்து உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள், ஓமியோபதி மருத்துக் கல்லூாி பேராசிரியர்கள், ஏபிடி, ஐசிடிசி, டிஎஸ்ஆர்சி மைய பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
The post திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினம் appeared first on Dinakaran.