×

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் நடமாடும் கால்நடைகளால்: விபத்து அபாயம்

திருப்பூர், டிச.5: திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் நடமாடும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணிக்கின்றனர். பனியன் தொழில் நிறைந்த திருப்பூரில் மாநகரம் மற்றும் ஊரக பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கால்நடை வளர்ப்பையும் பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். மாநகர பகுதிகளில் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் குறைவு என்பதால் மாடுகள் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும் போது சாலைகளில் சுற்றி திரிகிறது. சாலை ஓரங்களில் தங்களுக்கான உணவுகளை மாடுகள் தேடுவது வாடிக்கையாக அமைந்துவிட்டது.

இதன் காரணமாக, வாகன போக்குவரத்து நிறைந்த புதிய பேருந்து நிலையம் அருகே வடக்கு உழவர் சந்தை, காங்கேயம் சாலை, சிடிசி கார்னர், செல்லாண்டியம்மன் துறை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மாடுகள் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் இவை சாலைகளிலேயே அமர்ந்து விடுகின்றன. மேலும், பைக்கில் செல்பவர்கள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை சாலையில் மேய்ச்சலுக்காக விடுவதை தவிர்க்க போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

The post திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் நடமாடும் கால்நடைகளால்: விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur new bus station ,Tiruppur ,Dinakaran ,
× RELATED திருப்பூர்-கோவை எல்லையில் வேளாண்...