- சித்லபக்கம் காவல்துறை
- நிலையம்
- தாம்பரம்
- தாம்பரம் மாநகர காவல் நிலையம்
- Sitlabakkam
- சித்லபாகம் சட்டமும் ஒழுங்கும்
- குற்றப்பிரிவு
- சலையூர் அனைத்து பெண்கள்,
- க்ரோம்பேட் போக்குவரத்து நுண்ணறிவு
- தின மலர்
தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சிட்லபாக்கம் முதல் பிரதான சாலையில் சிட்லபாக்கம் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் சிட்லபாக்கம் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, சேலையூர் அனைத்து மகளிர், குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இயங்கி வருகிறது. இங்கு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், போலீசார் என 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லையில் இயங்கி வரும் முக்கிய காவல் நிலையங்களில் சிட்லபாக்கம் காவல் நிலையமும் ஒன்று. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 95979 57191 என்ற செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அதை வெடிக்க வைப்பதற்கான ரிமோட் எனது கையில் உள்ளது. ரிமோட்டை அழுத்தினால் காவல் நிலையம் வெடித்து தரைமட்டமாகிவிடும்,’ என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதை தொடர்ந்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகம் மற்றும் சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் இருந்து ஒரு உதவி ஆய்வாளர் உள்பட 5 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் எந்த ஒரு வெடிகுண்டும் சிக்கவில்லை.
இதை தொடர்ந்து வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பு புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.முதற்கட்ட விசாரணையில், காவல் கட்டுப்பாட்டறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள வேப்பூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (43) என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதும் தெரியவந்தது.
மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் சிட்லபாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்ததாகவும், அவரது மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்படும்போது எல்லாம் காவல் கட்டுப்பாட்டு அறை அல்லது சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தனது மனைவியை வெட்டி கொலை செய்து விட்டார்கள், உடனே வாருங்கள் என கூறி அலப்பறையில் ஈடுபட்டு வந்ததாகவும், மனநல பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், மது போதையில் தொடர்ந்து காவல் நிலையங்களுக்கு தொடர்பு கொண்டு ஏதாவது ஒரு புரளியை கிளப்பி விடுவதை வேலையாக வைத்திருந்த ரஞ்சித் தற்போது முதல்முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில் இதுபோன்று காவல் நிலையங்களுக்கு தொடர்பு கொண்டு ஏதாவது ஒரு புரளியை கூறி வந்துள்ளதாகவும்,
தொடர்ந்து இதுபோல காவல் ஆணையரகம், காவல் கட்டுப்பாட்டு அறை, பல்வேறு காவல் நிலையங்களுக்கு தொடர்பு கொண்டு ஏதாவது ஒரு புரளியை கூறி போலீசாரை அலைக்கழித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து அவரை பிடித்து மனநல காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
The post சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மனநலம் பாதித்தவருக்கு வலை appeared first on Dinakaran.