அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், நேற்று முன்தினம் இரவு, பாடி குப்பம் மெயின் ரோடு வழியாக நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், சிறுவனை வழிமறித்து, ‘அவசரமாக ஒருவரிடம் பேச வேண்டும். உனது செல்போனை கொடு,’ என கேட்டுள்ளனர். சிறுவன் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த 3 பேரும் அவனை சரமாரியாக தாக்கி அவனது செல்போன் மற்றும் ரூ.3,800 ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சிறுவனை சரமாரி தாக்கி பணம், செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.